Star17. தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை!
நான் முன் வைத்த ஒரு எளிய கேள்விக்கு பாஸ்டன் பாலாவின் சுவாரசியமான, விளக்கமான பதிலின் நீளத்தை முன் வைத்து அதை தனிப்பதிவாக இடுகிறேன். இந்த பதிலுக்காக தன் நேரத்தை ஒதுக்கிய அவருக்கு என் நன்றிகள்.
கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ?
பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.
1995- இல் 'ஆசை' படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து 'சத்தம் போடாதே'வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.
அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்...
தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.
அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.
இதை மறைக்க இணையம் உதவுகிறது. 'அந்த நாள் ஞாபகம்' என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.
அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா... நோ; செய்திகள் - நோ...நோ; அரசியல் - மூச்!
இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.
பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.
மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.
இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
எப்படி உடைகிறது?
சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe - 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.
பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.
இவற்றைப் பார்த்து புலம்பி 'எங்கே நிம்மதி? ஏது நீதி?' என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.
அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:
1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் - அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.
2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.
3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். 'மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.' இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.
இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.
மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.
இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.
உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:
அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.
கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.
தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.
ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.
***************************************
25 மறுமொழிகள்:
Boston Bala,
Many thanks for spending your time and energy ...
நன்றி பாலா. (நடுவில் கொஞ்சம் விழுங்கி விட்டுள்ளது. கொஞ்சம் கவனியுங்களேன்)
//தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.//
//ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.//
இயல்பு வாழ்கை என்னவென்று தெரியாதவர்கள் சொல்வது இது.(உண்மையில் இணையத்தில் தான் வாழ்க்கை இருக்கு என்பவர்கள் மன நோயளிகள்)
தமிழ் மணத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட வலைப்பதிவுகள் 2000 சொச்சம் தான் அதிலும் ஒரே நபரே பல பதிவுகள் பதிவு செய்துள்ளார்.
6.5 கோடி தமிழர்களில் இந்த அற்ப 2000 சொச்சம் தவிர மற்றவர்கள் எல்லாம் மன நிலை பிறழ்ந்தவர்வர்களா? சரி அயல் நாடு சென்றவர்கள் எல்லாம் வலைப்பதிவு மூலம் தான் ஜீவிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. என் கணக்குப்படியே குத்துமதிப்பாக ஒரு பத்து லட்சம் பேராவது அயல்நாட்டில் இருக்காங்க, ஆனால் 2000 பதிவுகள் தான் இருக்கு, அப்போ மத்தவங்க எல்லாம் மன நோயாளியா?
அடக்கொடுமையே!
பா.பாலா உங்களை பலரும் ஏற்றிவிட்டு கடைசியில் வலைப்பதிவு தான் உலகம்னு நினைக்க ஆரம்பிச்சுட்டிங்களா? (காபி பேஸ்ட் போடும் போதே இந்த நிலைமைனா, சொந்தமா எழுத ஆரம்பிச்சா என்னாவது :-)) )
//ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து//
நிஜம்தான்! சொந்தபந்தங்களுக்குள் கூட சொல்லாத விஷயங்களை சொந்த பிளாக்கில் சொல்ல முடிகிறது :))))
//சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை//
100% உண்மைதான் உலகமே தெரிகிறது வலை மூலம் ஆனால் அதிகம் பழக்கப்படுத்திக்கொள்ள முடியாத சூழலில் அக்கம்பக்கம்!
//வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால்//
அய்யோ...!
அப்படியாஆஆஆ :((((
//Boston Bala said...
நன்றி பாலா. (நடுவில் கொஞ்சம் விழுங்கி விட்டுள்ளது. கொஞ்சம் கவனியுங்களேன்)
//
Very Sorry, Now the post is alright! "NO SWALLOW" this time around ;-)
//உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; //
இதுதானா மேட்டர்!
எனக்கு தெரிந்து பாபா சொன்ன சைக்கோக்களில் ஒருவர் வவ்வால்
இவர் பாபாவை கேள்வி கேட்பது சம்ம காமேடி
வவ்வால், பதிலுக்கு நன்றி.
---அப்போ மத்தவங்க எல்லாம் மன நோயாளியா? ---
இணையத்தில் உலாவுபவர்களைத்தானே இதில் எழுதியுள்ளேன். மற்ற superset எல்லாம் எதுக்கு கொண்டு வந்து ஜல்லியடிக்கிறீங்க
---காபி பேஸ்ட் போடும் போதே---
இந்த மாதிரி பதிவரை தாக்கும் வித்தை நல்லாருக்கு. ஒற்றை வார்த்தையில் தடாலடி முடிவுரை தருவதும் அருமை.
// Anonymous said...
எனக்கு தெரிந்து பாபா சொன்ன சைக்கோக்களில் ஒருவர் வவ்வால்
இவர் பாபாவை கேள்வி கேட்பது சம்ம காமேடி//
யாரையோ சொன்னா யாருக்கோ நோவுதே :-))(கொடுத்த காசுக்கு மேல கூவுறானே ங்கொய்யாலே...)
என்னடா வவ்வால் கடைசில உன் நிலைமை அனானிகளுக்கு எல்லாம் விளக்கம் சொல்லும் படி ஆச்சு அவ்வ்வ்...!
இந்தப்பதிவில் இதுவே முதலும் கடைசியுமான அனானிகளுக்கான பதிலாக இருக்கட்டும்!
இணையம் மன அமைதியை தருகிறது என்று நம்ப ஆரம்பிப்பது internet addiction disorder , "compulsive behaviour disorder" என்ற வகையான நிலைக்கு மனநிலை போவதன் அறிகுறி இதெல்லாம் நான் சொல்லவில்லை, ஹார்வர்ட் பல்கலையின் இணையம் குறித்தான ஆராய்ச்சிகள் சொல்கிறது.இன்னும் அந்த ஆய்வுகள் முழுமை பெறவில்லை, எனினும், over depentant on internet is undesirable என்று ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க.
மேற்சொன்வற்றை கூகிளில் போட்டாலே பல விவரங்கள் கிடைக்கும்.
மனைவி, குடும்பம் இவர்களுடன் பேசுவதை விட , இணையத்தில் பேசுவது பிடிக்கும், மற்றவர்களை தவிர்க்கவும் ஆரம்பிப்பார்கள்.எனவே இணையத்தில் எல்லாம் இருக்கிறது, ஆனால் அதுவே அதிகம் சார்புத்தன்மையை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்! அதாவது இணையம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது போல ஆகிவிடக்கூடாது. அப்புறம் அது "obsessive-compulsive disorder '' என்று ஆகிவிடும். காலையில் எழுந்து ஒரு பதிவாவது போடலைனா கை உதறும், கக்கூஸ் போக முடியாது!
சுஜாதா முன்னர் எப்போதோ இது பற்றி விகடனில் எழுதியுள்ளார், என்னை நம்பாதவர்கள் அவரை நம்புவாங்க :-))
வந்து கருத்து சொன்ன ஆயில்யன், வவ்வால், அனானி, பூனைக்குட்டி ஆகியோருக்கு என் நன்றி.
பாபா,
மீண்டும் நன்றி :)
பாஸ்டன் பாலா,
//இணையத்தில் உலாவுபவர்களைத்தானே இதில் எழுதியுள்ளேன். மற்ற superset எல்லாம் எதுக்கு கொண்டு வந்து ஜல்லியடிக்கிறீங்க
---காபி பேஸ்ட் போடும் போதே---
இந்த மாதிரி பதிவரை தாக்கும் வித்தை நல்லாருக்கு. ஒற்றை வார்த்தையில் தடாலடி முடிவுரை தருவதும் அருமை.//
ஹே... ஹே ... பா.பாலா,
நீங்கள் தான் சொன்னிங்க வலைபதிவு இல்லைனா, வெளிநாட்டுக்கு வேலை , அல்லது ஏதோ ஒன்றுக்காக போனவங்க எல்லாம் மன நோயாளி ஆகி இருப்பாங்கனு,
வலைப்பதிவு இல்லைனா மன நோயாளிகள் அதிகம் ஆகி இருப்பாங்கனு சொன்னது யாராம்
(உண்மைல பலரும் வலைப்பதிவு இல்லைனா , அதை பற்றி தெரியாம இருந்தா என் நிம்மதி குலையாது இருந்து இருக்கும்னு பலரும் புலம்புறாங்க!( என்னைப்போல கல்லுளி மங்கர்கள் தனிக்கணக்கு)
வெளி நாட்டுல வாழும் தமிழர்களில் .01 சதவீதம் பேருக்கு தான் தமிழ் வலைப்பதிவுனா என்னனே தெரியும் :-))
நீங்க பொதுவா வெளி நாட்டில வாழும் தமிழர்களுக்கு இணையம், வலைப்பதிவு தெரியலைனா நரகம்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டு போறிங்க அதான் குறுக்கே வந்தேன்!
ஆனா இணையத்தில வாழ்கைய தேடுறவங்கள உலகம் சைக்கோனு சொல்லுதே!
இணையம் என்பது வாழ்கை அல்ல அதில் வாழ்வை தேடாதே என்பதே , பல உளவியல் நிபுணர்களின் கருத்து! நீங்க அதுக்கு உல்டாவா சொன்னா எப்படி? மத்தவங்க வேணா இன்னார் சொன்னா சரியா இருக்கும்னு பொத்திக்கிட்டு போவாங்க நாம ஆண்டவனே வந்து சொன்னாலும் கேள்வி கேப்போம்ல!
//---காபி பேஸ்ட் போடும் போதே---
இந்த மாதிரி பதிவரை தாக்கும் வித்தை நல்லாருக்கு. ஒற்றை வார்த்தையில் தடாலடி முடிவுரை தருவதும் அருமை.//
இது கூட சும்மா எல்லாம் சொல்லவில்லை, கொஞ்ச காலாமாக அவதனித்து தான் சொல்கிறேன், சும்மா நாளு இடத்தில இருந்து பிராய்ஞ்சு போடுவது வேறு அதற்கான உழைப்பு வேறு, ஒரு வேளை உங்கள் அனுதாபிகள் ஆகா பாஸ்டன் பாலா சொல்லிட்டார்னு சொல்லிக்கலாம், என்னைப்பொருத்த வரை நீங்கள் சொல்வது எல்லாம் ஆறிய கஞ்சி தான் அதான் அப்படி சொன்னேன்! நான் என்னத்த பெரிசா கிழிச்சேன்னு கேட்கலாம், ஒன்றும் பண்ணவில்லை தான், ஆனாலும் நான் என்ன சொல்லி இருக்கேனோ(என்பதிவில்) அதுக்கு ஏத்த பொருள் அடக்கத்தை ஒருவர் தேடனும்னா , அதுக்கு நிறைய நேரம் தேவைப்படும்!(அதான் மேட்டர்)
உங்கள் மேல எனக்கும் ஒரு நல்லெண்ணம் உண்டு, ஆனால் அதுக்காக சொல்வதெல்லாம் உண்மைனு நம்பும் அப்பிராணி அல்ல நான்!
வவ்வால்,
பயமறியான்!
வவ்வால்,
நீங்க உங்க கருத்தை தாராளமாச் சொல்லுங்க ! ஆனா, பாபா கட் அண்ட் பேஸ்ட் பண்றார் போன்ற மேட்டரெல்லாம் விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல என்பது என் எண்ணம் !
மேலும், இந்த "ஏத்தி உடறது" என்பது நிறையவே இங்கே நடந்து கொண்டு தான் இருக்கு, பாபா 'ஏத்தி உடறது' பத்தி தெரியாதவர் அல்லர் என்று நினைக்கிறேன். அவரை ஏத்தி உடறது யார் யாருன்னு சொன்னா நல்ல இருக்கும் !
அது போலவே, இந்த ஏத்தி உடறதை வச்சு தங்களை பிஸ்தான்னு எண்ணிக்கிறவங்களும் இங்கே நிறைய உலவறாங்க !
பயமறியாம இருக்கறது எனக்கும் பிடிக்கும் :)
நன்றி.
எ.அ.பாலா,
//ஆனா, பாபா கட் அண்ட் பேஸ்ட் பண்றார் போன்ற மேட்டரெல்லாம் விவாதிக்கப் பட வேண்டிய ஒன்றல்ல என்பது என் எண்ணம் !//
விவாதிக்கும் நோக்கில் எல்லாம் அதை இங்கே சொல்லவில்லை.
//ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.//
இணைய சைக்கோ ஆகிவிட்டதாக சுய வாக்குமூலம் சொல்லி இருந்தாரே அதான், அந்த வேலை செய்யும் போதே இப்படியா என்று.
கை வலிக்குதுனு யாராவது சொன்னா ஏன் கேட்போம், சாப்பிட்டேன் கை வலிக்குதுனு சொன்னா, அதுக்கே அப்படியானு கேட்க மாட்டோமா அதான் கேட்டேன்.
:-))
ஏத்தி விடுறது யார்னுலாம் கேட்டா எப்படி, நடப்பதை ஒரு பொதுவாக சொல்வது தானே!
//இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது//
இது நல்லாயிருக்கே!.
வவ்வால்... உங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி.
தமிழ்ப்பதிவின் தற்கால பெருஞ்சாதனையாக எதைக் கருதலாம் என்றபோது தோன்றியது இதுதான்.
---வெளி நாட்டில வாழும் தமிழர்களுக்கு இணையம், வலைப்பதிவு தெரியலைனா நரகம்னு---
ஒன்று இப்படி அல்லது அப்படி என்பது போலவோ;
புள்ளிவிவரம் வைத்தோ; இந்த முடிவுக்கு வருவதில்லை.
(நல்ல வேளை... இன்னும் யாரும் எத்தனை பேர் மனப்பிழற்வில் இருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்று ஆய்வியல் கணக்கு கேட்கவில்லை; என்னிடமும் கிடையாது; i.e. this is not scientific or research/study based fact/number based analysis :)
---இணையம் என்பது வாழ்கை அல்ல அதில் வாழ்வை தேடாதே என்பதே , பல உளவியல் நிபுணர்களின் கருத்து!---
பதின்மர்களுக்கு (அல்லது பதின்ம வயதாக நினைத்துக் கொள்பவர்களுக்கு) செகன்ட் லைஃப்; மானகையில் விழுந்தவர்களுக்கு ப்ளாக்பெரி/ஐஃபோன் போன்ற சாதனங்கள் என்று வடிகால்கள் இருப்பது போல்; இதில் எல்லாம் விழ முடியாதவர்களுக்கு பதிவுலகம் ரட்சிக்கிறது; மீட்சியளிக்கிறது.
---சொல்வதெல்லாம் உண்மைனு நம்பும் அப்பிராணி அல்ல நான்!---
கருத்தெல்லாம் 101% உண்மை அல்ல. தகவல் களஞ்சியம்/எழுத்தாளர் உருவாக்கம்/மக்கள் தொடர்பு/கட்டற்ற சுதந்திரம் போன்றவை பிறவற்றாலும் ஊடகங்களாலும் சாத்தியம்.
ஆனால், மாத்ரூபூதமிடமோ ருத்ரனிடமோ செல்வதற்கு மனத்தடை கொண்ட தமிழ்/இந்திய பின்னணியில், தமிழ்ப்பதிவுகள் அனானி/தங்குதடையற்ற வெளிப்பாடுகளை சுளுவாக்குவதால் USP- ஆக தோன்றியதை சொல்லி வைத்தேன்.
பாபா,
மீள்வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி.
நான் வவ்வாலை ஆமோதிக்கிறேன். வெளிநாட்டிற்கு வந்த பிறகு இன்னும் சன் டிவி, வலைப்பதிவு என்று ஏன் அலைகிறீர்கள்.
உங்கள் அபார்ட்மெண்டில் நடக்கும் ஒன் டிஷ் பார்ட்டிக்கு போங்கள். நடக்கவில்லையா, நீங்கள் ஆரம்பிங்கள்.
கம்யூனிட்டி செண்டரில் பங்கு கொள்ளுங்கள்.
டயபடீஸ் அசோசியஷன், கான்சர் பவுண்டேஷன் போன்ற குழுமங்களுகாக வீடு வீடாக சென்று நன்கொடை கேட்கும் வாலண்டியர் வேலை செய்யுங்கள்.
புது புது விளையாட்டுகளை கற்று கொள்ள கிளப்புகளுக்கு போங்கள்.
புது புது ஹாபி மற்றும் அதனை சார்ந்த கிளப்புகள் பாரம்கள் இவைகளில் பங்கு கொள்ளுங்கள்.
உலகம் மிக பெரியது வலைத்தளங்களை விட
வலைப்பதிவுகள்தாம் மனதை சுருக்குகிறது பாலா
சிவா,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க, நல்ல கருத்தும் சொல்லியிருக்கீங்க, நன்றி.
கால்கரி சிவா!
//நான் வவ்வாலை ஆமோதிக்கிறேன். வெளிநாட்டிற்கு வந்த பிறகு இன்னும் சன் டிவி, வலைப்பதிவு என்று ஏன் அலைகிறீர்கள்.//
இப்போவாது என்னோட அலைவரிசைக்கு வந்திங்களே,நன்றி!
நாம் எப்போதும் இப்படி தான் நினைப்பதை சொல்லிவிடுவோம், இன்னார்க்கு இப்படினு ஸ்டாண்டர்டு பின்னூட்டுவதே இல்லை!
நீங்கள் சொல்வது ரொம்ப சரி, அயல்நாட்டில் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது,அதான் நீங்கள் சொன்ன மாற்றுவழிகளை சொல்லவில்லை. இதில் ஆச்சர்யம் இதே மாற்றுவழிகளைத்தான் நானும் சொல்ல நினைத்தேன், எங்கே அதெல்லாம் இந்தியாவில் தான் , இங்கே வந்தா ஆபீஸ்- வீடு-ஆபீஸ் என்ற சுழற்சிதான்னு சொல்லி விடுவாரோ என்று பொத்திக்கொண்டு இருந்தேன்!
அங்கேயும் இப்படி சாத்தியம் எனில் வலைப்பதிவு , சன் டி.வி என்று எந்திரத்தனமாக போய்விடாமல் இருக்கலாம்.
இந்தியாவில் இருந்தாலும் நான் தொலைக்காட்சி பார்ப்பதே குறைவு, அதிலும் சன் டி.வி எல்லாம் ரொம்ப தூரம் எனக்கு!
பெரும்பாலும் விளையாட்டு சேனல்கள்தான், இங்கிலீஷ் பிரிமியர் லீக் பார்த்தாலும் பார்ப்பேனே தவிர இந்த தொடர்களை எல்லாம் பார்க்கவே மாட்டேன் :-))
//டயபடீஸ் அசோசியஷன், கான்சர் பவுண்டேஷன் போன்ற குழுமங்களுகாக வீடு வீடாக சென்று நன்கொடை கேட்கும் வாலண்டியர் வேலை செய்யுங்கள்.//
இது நல்ல எண்ணம் ஆனால் இந்தியர்கள் இந்த கருத்தில் நிறைய மாற வேண்டும், இங்கே அப்படி எதாவது கேட்க போனால் பிச்சைக்காரனை போல பார்க்கிறார்கள். பல இடத்தில் செக்கியூரிட்டிகளே தொரத்தி விடுறான்.
நான் ஒரே ஒரு முறை இப்படி இங்கே வாலண்டியராக போய் அவமானப்பட்டேன் அதுக்கு பிறகு மூச்!
//வலைப்பதிவுகள்தாம் மனதை சுருக்குகிறது//
ஆனால் மனதை சுருக்குவதாக சொல்ல முடியாது, யாராவது எதாவது சொன்னால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அப்படியே எடுத்துக்கொள்ளாமல் நாமும் கொஞ்சம் தேடிப்படித்தால் "மனம் , அறிவு" இரண்டும் விரிவடையும், ஆனால் "தல" சொன்னா சரிதான்னு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் சுருங்கி விடும் தான்!
எதையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் கேள்விகள் கேட்டு அது முட்டாள் தனமான கேள்வியாக இருந்தால் கூட கேட்டு விட வேண்டும்! அப்போ தான் நமக்கான தெளிவு பிறக்கும் , அதை மற்றவர்கள் தர வேண்டியதில்லை, நாமே பெறலாம்.
பா.பாலா,
உங்கள் பதில்கள் சரியானவையா என்று உங்கள் அந்தராத்மாவின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்!
ஆய்வுகளின் அடிப்படையில் எல்லாவற்றையும் பார்க்க முடியாது, ஆனால் மேதாவிலாசம் இருப்பதாக சொல்லப்படும் ஒருவர் அப்படிலாம் பாமரத்தனமாக செயல் பட முடியாது என்பதை அடிக்கோடிட்டு காட்டவே நான் அதை சொல்ல வந்தேன்!
மற்றப்படி நீங்கள் சொல்வது வந்து மிகச்சிலருக்கே பொருத்தமானது அதை பொது விதியாக ஆக்கி விட்டீர்கள்!
//மாத்ரூபூதமிடமோ ருத்ரனிடமோ செல்வதற்கு மனத்தடை கொண்ட தமிழ்/இந்திய பின்னணியில், தமிழ்ப்பதிவுகள் அனானி/தங்குதடையற்ற வெளிப்பாடுகளை சுளுவாக்குவதால் USP- ஆக தோன்றியதை சொல்லி வைத்தேன்.//
அதான் அயல் நாட்டில் போய் பிஸ்ஸா, பர்கர், வடிகால் எனில் பிளாக் பெர்ரி, ஐ போன் தான் தெரியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு கூடவா அந்த மன தடை!
மற்றப்படி கால்கரி சிவாவின் மாற்று வழிகளையும் யோசித்து பாருங்கள். வழி இல்லாமல் இல்லை!
நோகாமல் நோம்பு கும்பிடும் வழினா அது இணையம் சார்ந்தது தான், இருந்த இடத்திலே இருந்தே பினாத்திக்கலாம்! :-))
//"தல" சொன்னா சரிதான்னு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் சுருங்கி விடும் தான்!//
தல சொன்னா சரிதான்! :P
காசி,
//தல சொன்னா சரிதான்! :P//
:-))))
நான் இதை சரினு எடுத்துக்க மாட்டேன் :-))
Post a Comment